கிரிவலம் செல்ல 4 நாட்களுக்கு தடை :

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி உள்ளது. இணையதளம் மூலமாக முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் நேரடியாக அனுமதி சீட்டு பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டுமே, அண்ணாமலையார் கோயில் உள்ளே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். மேலும் பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நாள் என வரும் 17-ம் தேதி பிற்பகல் 1 மணியில் இருந்து 20-ம் தேதி வரை, முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அனுமதிச்சீட்டு பெற்றவர்கள் உட்பட அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய கோயில் உள்ளே அனுமதி கிடையாது.

மேலும், 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE