ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த : பிஹார் இளைஞர் கோவையில் கைது :

கோவை: வெளி மாநிலங்களில் இருந்து விரைவு ரயில்களில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் ஆர்பிஎஃப் உதவி ஆய்வாளர்கள் எல்.கார்த்திகேயன், பாலையா ஆகியோர் தலைமையில் ஆர்பிஎஃப் படையினர் நேற்று கோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், பாட்னாவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டபோது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பிஹார் மாநிலம் கட்டிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த பிஷேஷ் குமார் யாதவ் (26) என்பதும், கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் செல்வதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்