பழைய பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் - தலைமையாசிரியரிடம் சான்று பெற்று பயணிக்கலாம் :

கரோனா தொற்று பரவல் குறைந்ததால் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன. பள்ளி அமைந்துள்ள இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.

இவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் பள்ளி திறந்தவுடன், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது வழக்கம். பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸை காண்பித்து பயணிக்கலாம். சீருடை அணிந்து இருந்தாலும் பேருந்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டிலும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழைய பஸ் பாஸ் இல்லாத மாணவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா கூறும்போது, ‘‘பழைய பஸ் பாஸ், சீருடை இல்லாத மாணவர்கள் சுய விவரங்களுடன் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் கூடிய ‘போனபைட்' சான்று பெற்று, அதைக் காட்டி பயணிக்கலாம். இதுதொடர்பாக போக்குவரத்துதுறை அதிகாரிகளுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்