இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், இல்லாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் வாகனத் தணிக்கை மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 13-ம் தேதி நடந்த வாகனத் தணிக்கையில்ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து நேற்று முதல் மீண்டும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சவிதா பேருந்து நிறுத்தம், பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை, பேருந்து நிலையம் அருகே சுவஸ்திக் கார்னர், ஜி.எச். ரவுண்டானா, கருங்கல் பாளையம், சத்தி ரோடு போன்ற பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பின்போது ஹெல்மெட் அணியாமல் வருவோர் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago