வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் : திமுக-வினருக்கு அறிவுறுத்தல் :

சேலம்: வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்த பணிகளுக்கான படிவங்கள் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் மூலம் www.nvsoin என்ற முகவரியில் voter helpline என்ற செல்போன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 13-ம் தேதி 14-ம் தேதி மற்றும் 27, 28-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இடம் மாறிய வாக்காளர்கள், விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

எனவே, சிறப்பு முகாம்களில் சேலம் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைகழக, வார்டு செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் வாக்காளர் பெயர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு, வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்