கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த - 81 ஆயிரம் கிலோ சரவெடி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

தீபாவளிக்காக கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 81 ஆயிரம் கிலோ சரவெடி பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தீபாவளியின்போது பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் சரவெடி பட்டாசுகளை விற்பனை செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 29-ம் தேதி உத்தரவிட்டது.

குறிப்பிட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் பட்டாசு வெடித்தது, தடைசெய்யப்பட்ட வெடிகளை வெடித்தது உள்ளிட்டகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீபாவளிக்கு முந்தைய தினமான 3-ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் தமிழ்நாடு முழுவதும் 2,311 பேர் மீது 2,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களில் 2,200 பேர் கைதுசெய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மொத்தமாக 81,275 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சரவெடி பட்டாசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில்தான் அதிக அளவாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 1,014 பேர் மீது 1,008 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவர்களில் 980 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரத்தைப் பொருத்தவரை, தீபாவளி தினத்தன்று விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.2019-ம் ஆண்டில், 204 வழக்குகள்பதிவான நிலையில், 2020-ம் ஆண்டில் 428 வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டில் 1,008 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நீலகிரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்