முதல் பருவத் தேர்வுகளை முன்னிட்டு - 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சிபிஎஸ்இ உத்தரவு :

கரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு 2 பருவங்களாக நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. அதன்படி. முதல் பருவத் தேர்வுகள் நவ.16-ம் தேதி தொடங்கி டிச.22-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

முதல் பருவத் தேர்வுகள் அப்ஜெக்டிவ் முறையில் நடத்தப்படுகிறது. இத்தேர்வு காலை 11.30 முதல் 1 மணி வரை 90 நிமிடங்கள் நடைபெறும். மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கூடுதல் சலுகை நேரம் வழங்கப்படும்.

மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண் விவரங்களை டிச.23-ம் தேதிக்குள் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும்.

முதல்முறையாக ஓஎம்ஆர் விடைத்தாளில் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். எனவே, அதில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பயிற்சியை பள்ளி முதல்வர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2-ம் பருவத் தேர்வுகள் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்