திண்டிவனம் வட்டம் , மோழியனுார் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராமன் மகன் சுரேஷ்(28). இவர் நேற்று வழக்கம் போல் மோழியனுாரில் உள்ள வராக நதியை கடந்து சென்று, செ.கொத்தமங்கலம் பகுதியில் உள்ள வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். பிற்பகல் 3.30 மணியளவில் மழை வெள்ளத்தால் தண்ணீர் அதிகமாக வந்தது. அப்போது, சுரேஷ் நண்பர்களுடன் மாடுகளை மீண்டும் வீட்டிற்கு ஓட்டிச் செல்ல ஆற்றை கடக்க முயன்றார்.
சுரேஷூடன் வந்த நண்பர்களும், மாடுகளும் ஆற்றின் கரையைக் கடந்தனர். சுரேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தேடினர்.
இரண்டு மணிநேர தீவிர தேடுதலுக்குப் பின், முள் செடியில் சிக்கியிருந்த சுரேஷின் சடலத்தை மீட்டனர்.
பெரியதச்சூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago