கடலூர் மாவட்டத்தில் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பின.
முஷ்ணம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நடவு நட்ட விளைநிலங்கள் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நேற்றைய மழையளவு, குறிஞ்சிப்பாடியில் 157 மிமீ, வடக்குத்தில் 142 மிமீ, சிதம்பரத்தில் 106 மிமீ, புவனகிரியில் 84மிமீ, அண்ணாமலைநகரில் 76.6 மிமீ, விருத்தாசலத்தில் 25 மிமீ, கடலூரில் 24.6 மிமீ, பரங்கிப்பேட்டையில் 22.6 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 19 மிமீ, பண்ருட்டியில் 12 மிமீ, சேத்தியாத்தோப்பில் 11.4 மிமீ மழை பெய்தது. நேற்று காலை சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
தொடர் மழையால் மாவட் டத்தின் பல இடங்களில் சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாத அளவுக்கு பாதிப் படைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago