உதவி அரசு வழக்கறிஞர்கள் தேர்வு மதுரையில் 22 பேருக்கு அனுமதி மறுப்பு :

By செய்திப்பிரிவு

மதுரையில் உதவி அரசு வழக் கறிஞர்களுக்கான தேர்வு எழுத தாமதமாக வந்ததாகக் கூறி 22 பேருக்கு அனுமதி மறுக்கப் பட்டது.

தமிழ்நாடு அரசு தேர்வா ணையம் சார்பில் தமிழகம் முழு வதும் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வு நேற்று நடந்தது. இதில் வழக்கறிஞர்கள் தேர்வு எழுதினர்.

மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இத்தேர்வு நடந்தது. தேர்வு மையத்துக்கு காலை 9.15 மணிக்குள் வருமாறு தேர்வு எழுதுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாராயணபுரம் எஸ்இவி மெட்ரிக். பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தேர்வு எழுதினர். இந்த மையத்தில் 16 பேர் தேர்வு தொடங்குவதற்கு 15 முதல் 30 நிமிடத்துக்கு முன்பாக வந்தனர். இவர்களைக்கூட தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. போலீஸார் தேர்வு எழுத வந்தவர்களை சமாதானம் செய்து தேர்வு எழுத அனுமதிக்க வைப்பதாகக் கூறினர். ஆனால், அவர்களைத் தேர்வு எழுத அதி காரிகள் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து தேர்வு எழுத முடியாதவர்கள் கூறியதாவது:

தேர்வு 10 மணிக்குத்தான் தொடங்குகிறது. தேர்வுக்கு முன்கூட்டியே தயாராவதற்காக 9.15 மணிக்கு வருமாறு கூறியுள் ளனர். ஆனால், 9.50 மணி வரை வந்தவர்களை மற்ற மையங்களில் அனுமதித்துள்ளனர். இந்த ஒரு மையத்தில் மட்டும் 9.25 மணிக்கு வந்தவர்களைக்கூட அனுமதிக்க வில்லை.

சிலர் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பெண்கள் உட்பட சிலர் வாக்குவாதம் செய்தோம். அதனால், தேர்வு எழுத உள்ளே வரச்சொல்லிவிட்டு பிறகு ஆப்ஃசென்ட் போட்டு தேர்வு எழுத விடாமல் திருப்பி அனுப்பினர். அதனால், ஏமாற்றம் அடைந்தோம் என்றனர்.

தேர்வுமைய அதிகாரிகள் கூறும்போது, தேர்வாணையம் 9.15 மணிக்குப் பிறகு வந்தவர் களை அனுமதிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. அதனால், எஸ்இவி மையம் உட்பட மதுரையில் தாமதமாக தேர்வு எழுத வந்த 22 பேர் அனுமதிக்கப்படவில்லை என் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்