மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு சு.வெங்கடேசன் எம்.பி எழுதிய கடித விவரம்:
கோவிட் காரணமாக ஹஜ் புறப்பாடு மையங்கள் 21-ல் இருந்து 10 ஆக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. 2022-ம் ஆண்டிலும் புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு, கவுகாத்தி, லக்னோ, நகர், கொச்சி ஆகிய 10 மையங்களே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் பயணிகள் கொச்சியில் போய் ஏற வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கானோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். 1987-ல் இருந்து சென்னையில் புறப்பாடு மையம் இருந்து வந்திருக்கிறது. சென்னையில் இப்பயணிகள் ஓய்வு எடுத்து செல்வதற்கான ஹஜ் இல்லம் இருக்கிறது. இதை தமிழ்நாடு ஹஜ் குழுவும், ஹஜ் சேவை அமைப்பும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன.
கேரளாவில் கோவிட் தொற்று அதிகமாக உள்ளது நவ.3-ல் மட்டும் 7,545 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் நிலைமை என்னவாக இருக்கும் எனக் கணிக்க இயலாது.
கோவிட் சூழலில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பயணிகள், குறிப்பாக மூத்த பயணிகளை அலைய விடுவது சரியல்ல.
ஆகவே, சென்னையில் புறப்பாடு மையம் அமைக்க மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago