சதுரகிரி மலைப் பாதையில் - ஓடையில் பாலம் கட்ட அளவீட்டு பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பாலம் கட்டுவதற்கான முதல்கட்ட அளவீட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

சதுரகிரி மலையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 8 பேர் உயிரிழந்தனர்.

அதையடுத்து, மாதந்தோறும் அமாவாசையை ஒட்டிய 4 நாட்கள், பவுர்ணமியை ஒட்டிய 4 நாட்கள் என மாதம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும், மழை பெய்யும் நேரங் களில் பக்தர்கள் மலையேற திடீர் தடை விதிக்கப்படும். இந்நிலையில் சதுரகிரிக்குச் செல்லும் ஓடைகளில் பாலம் கட்டவும், தினமும் பக்தர் களை அனுமதிக்கக் கோரியும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் ஓடைகளான சங்கிலிப் பாறை, பிளாவடி கருப்பசாமி கோயில் ஓடை, மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் பாலம் கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளை, வனத்துறை சாப்டூர் ரேஞ்சர் செல்லமணி தலை மையில் அலுவலர்கள் மேற் கொண்டு வருகின்றனர். விரைவில் பாலம் கட்டும் பணி தொடங்கும் என வனத்துறையினர் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்