காரியாபட்டி அருகே உள்ள மந்திரி ஓடை நரிக்குறவர் காலனியில் சிறு பாலம் அமைப்பதற்கும், சமுதாய சுகாதார வளாகம் கட்டுவதற்குமான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர் தங்கம்தென்னரசு பங்கேற்று நிர்வாக அனுமதி ஆணைகளை வழங்கி, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், நரிக்குறவ இன மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: இப்பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.35 லட்சம் மதிப்பில் மந்திரி ஓடை- சத்திர புளியங்குளத்தில் சிறு பாலம் அமைப்பதற்கும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.5.75 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கும், ரூ.1.90 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைக்கவும், ரூ.3.84 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதிகள் செய்வதற்கு என மொத்தம் ரூ.46.49 லட்சம் மதிப்பீட்டில் நரிக்குறவர் இன மக்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக இந்த அரசை முதல்வர் ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago