மதுரை மாநகராட்சியில் ரூ.60 கோடியில் 190 சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதி யில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகனங்கள் அடிக்கடி பழுதடை வதுடன், விபத்துகளும் ஏற்படு கின்றன. குறிப்பாக மழைக் காலங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத் துக்குள்ளாகி வருகின்றனர்.
சாலைகள் புதுப்பிக்கப் பட்டாலும், அவை தரமின்றி இருப் பதால் சில மாதங்களிலேயே சேத மடைந்து விடுகின்றன. இது தவிர பாதாள சாக்கடை பணிக்காகவும், குடிநீர் குழாய் பதிக்கவும் சாலைகளைத் தோண்டி சேதப் படுத்துகின்றனர். அங்கு பேட்ஜ் ஒர்க்கை கூட உடனடியாக மேற் கொள்வதில்லை.
இதன் காரணமாக சாலை முழுவதும் சேதமடைந்து விடு கின்றன. இதுபோல் மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகள் நீண்ட காலமாக புதுப்பிக்க வில்லை.
சாலையை புதுப்பிக்கக்கோரி சமூக ஆர்வலர்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநில அர சின் நிதி ஒதுக்கீட்டில் 190 சாலைகளை ரூ.60 கோடியில் புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக ரூ.20 கோடிக்கு 65 சாலைகளைப் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக ரூ.40 கோடி யில் 125 சாலைகளை புதுப் பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சாலைகளை தரமானதாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் கூறுகையில், வாகனங்கள் அதி கம் செல்லும் சேதமடைந்த சாலை களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. முதல் கட் டமாக மகால் ரோடு, வெளி வீதி, மாரட் வீதிகள் எல்லீஸ்நகர் சாலை உள்ளிட்ட 65 சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago