நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனங்கள் அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி வைப்பு :

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.

வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி பேசியது: அரியலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் வரை நடைபெற்று முடிந்த 6 கட்ட தடுப்பூசி முகாம்களில் 2,41,515 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் 26 நடமாடும் வாகனங்கள் மூலமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் இளவரசன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலர்கள் ரேவதி, சந்திரலேகா மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்