திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு நேற்று வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாக 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 1.11.2021-ல் வெளியிடப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் வரைவு பட்டியலின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 370 வார்டுகளுக்கு வார்டு வாரியாக வாக்காளர்கள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
1.11.2021-ன்படி மாவட்டத்தில் நகர்ப்புற வாக்காளர்கள் விவரம்:
திருநெல்வேலி மாநகராட்சி: 55 வார்டுகள், ஆண்கள்- 2,03,882, பெண்கள்- 2,12,471, இதரர்- 37, மொத்தம் 4,16,389.
நகராட்சிகள்: 42 வார்டுகள், ஆண்கள்- 35,479, பெண்கள்- 378,83, இதரர்- 2, மொத்தம்- 73,364.
பேரூராட்சிகள்: 273 வார்டுகள், ஆண்கள்- 1,15,984, பெண்கள்- 1,22,600, இதரர்- 10, மொத்தம்- 2,38,594.
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் வரையில் வாக்களிக்க வசதியாக மாவட்டத்தில் 908 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று வெளியிட்டார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் பெற்றுக்கொண்டார். நகராட்சிகளின் மண்டல இயக்குநர் விஜயலட்சுமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குத்தாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago