தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நேற்று அலைமோதியது.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று இரவு தொடங்குகிறது. இந் நிலையில், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. காலை 6 மணியில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கினர்.
இவர்களில் 60 சதவீதம் பேர் ஆந்திரா மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள். கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன பாதையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். மேலும் அவர்கள், கோயிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் யானை உள்ளிட்ட படைப்புகள் அருகே நின்று செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்ததால், மாட வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, கோயிலில் ஆய்வு செய்தஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்டோரின் வாகனங்கள் செல்வதற்காக இதர வாகனங்கள் தடுக்கப்பட்டதால், பே கோபுர வீதி, பெரிய தெருவில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பின்னர், காவல்துறையினர் போக்கு வரத்தை சரி செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago