தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நவாப்பாளையம் ஓடையில் இருந்து மணலை சேகரித்து, ஓடை அருகே கிராம மக்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் நேற்று முன் தினம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, தண்ணீர் செல்லும் ஓடையில் இருந்து மணல் குவித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த கலசப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago