தீபாவளியை முன்னிட்டு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தம் ரூ.49.29 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் 290-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி ரூ.17.51 கோடிக்கும், தீபாவளி தினமான 4-ம் தேதி ரூ.16.19 கோடிக்கும் மதுபாட்டில்கள் விற்பனையாகின. இரு தினங்களிலும் மொத்தம் ரூ.33.70 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனையாகின.
நீலகிரி மாவட்டத்தில் 70 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.மாதம் தோறும் சுமார் ரூ.3 கோடி அளவில் மது விற்பனையாகிறது. இந்நிலையில், நீலகிரியில் தீபாவளி விற்பனை கடந்தாண்டை விட இந்தாண்டு இரட்டிப்பாகியுள்ளது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரு நாட்களில் ரூ.5 கோடியே 59 லட்சத்துக்கு மது விற்பனையானது.
திருப்பூர் மாவட்டத்தில் 250 மதுக்கடைகள் உள்ளன. வழக்கமாக சாதாரண நாட்களில் ரூ. 7 கோடி வரை மது விற்பனை இருக்கும். தீபாவளி தினத்தில் கூடுதலாக ரூ. 3 கோடிக்கு விற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago