தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலை, மாலை இரு வேளைகளிலும் 6 மணி முதல் 7 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. அனுமதி அளிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில் 20 வழக்குகளில் 20 பேரும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 13 வழக்குகளில் 13 பேரும், செஞ்சி காவல் உட்கோட்டத்தில் 9 வழக்குகளில் 9 பேரும், கோட்டக்குப்பம் காவல் உட்கோட்டத்தில் 7 வழக்குகளில் 8 பேர் என 49 வழக்குகளில் 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் 47 பேர் மீது வழக்கு
புதுச்சேரி சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதிக திறன் கொண்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வழிபாட்டுத்தலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீமதின்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள், சரவெடி போன்ற பட்டாசுக்களை வெடிக்கக்கூடாது என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடடப்பட்டது. இதில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்த தடைகளை மீறி புதுச்சேரியில் பட்டாசு வெடித்த 47 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago