முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம் : கரோனா காரணமாக கோயிலில் தங்கி விரதம் இருக்க தடை

By செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

கந்த சஷ்டி விழாவையொட்டி திருப்பரங் குன்றம் கோயிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணியளவில் சிவாச்சாரியார்கள் சுவாமிக்கு கந்த சஷ்டி விழாவுக்கான காப்பு கட்டினர். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

வழக்கமாக மதுரை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே விரதம் இருப்பர். கரோனா காரணமாக கோயிலில் தங்கி விரதம் இருக்கத் தடை விதிக்கப்பட்டது. நவ.8-ல் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 9-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.

அழகர்கோவில் மலையில் உள்ள சோலை மலை முருகன் கோயிலில் நேற்று முன்தினம் தொடங்கிய கந்த சஷ்டி விழா அக்.10-ம் தேதி வரை நடக்கிறது. 9-ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. கரோனா காரணமாக சுவாமி புறப்பாடு கோயில் உள் பிரகாரத்திலேயே நடைபெறுகிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் பங்கேற்க அனுமதித்தாலும், சூரசம் ஹாரத்தின்போது பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்