சென்னிமலை, திண்டல் முருகன் கோயில்களில் - கந்த சஷ்டி விழா தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சென்னிமலை, திண்டல் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி பெருவிழா நேற்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்த சஷ்டி அரங்கேற்றம் நடந்த சென்னிமலை முருகன் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, கந்த சஷ்டி பெருவிழா கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்த ஆண்டும் கட்டுப்பாடுகளுடன் கந்த சஷ்டி விழா கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பு அபிஷேகத்துடன் நேற்று தொடங்கியது. வரும் 9-ம் தேதி மாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, 10-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி, 9-ம் தேதி மாலை 5.30 மணி முதல், 10-ம் தேதி காலை 6 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே காப்பு கட்டி விரதம் இருந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினர். நேற்று காலை கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது. கரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு, சென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்