விராச்சிலையில் மஞ்சுவிரட்டு: காளை முட்டி ஒருவர் உயிரிழப்பு :

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விராச்சிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற் றது. இதில், பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தமிழக அரசிடம் இருந்து முறைப்படி அனுமதி பெறாமல் இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்ற போதும், அங்கு 50-க்கும் மேற் பட்ட போலீஸார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர். 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வை யாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில், காளை முட்டியதில் மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த் துக்கொண்டிருந்த பரளியைச் சேர்ந்த கணபதி மகன் கருப்பையா (52) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 31 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் களை, ஆட்சியர் கவிதா ராமு பார்வையிட்டு, ஆறுதல் கூறினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி உடனிருந்தார்.

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக விராச்சிலையைச் சேர்ந்த எஸ்.சிங்காரம், எஸ்.சந்திர போஸ், டி.அடைக்கலம் காத்தான் உட்பட 10 பேர் மீது பனையப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்