திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 30 ஆயிரம் ஏக்கர் பரப்பாளவில் சம்பா, தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் நிலவும் சூழல் குறித்து பார்வையிட்டு, அரசுக்கு தெரிவிப்பதற்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை இயக்குநர் ஏ.அண்ணாத்துரை நேற்று திருவாரூர் மாவட்டத்துக்கு வந்தார்.
அவர் கொரடாச்சேரி, வலங்கை மான், திருவாரூர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள சம்பா, தாளடி வயல்களை பார்வையிட்டார். அவருடன், ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன், வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் ஆகியோர் சென்றனர்.
தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றியப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அண்ணாத்துரை பார்வையிட்டபோது, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து உடன் சென்றார். தொடர்ந்து, மன்னார்குடி ஒன்றியத் திலும் அண்ணாத்துரை ஆய்வு மேற்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago