திருநெல்வேலி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங் களிலும் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 7, மணிமுத்தாறு- 5.4, கொடுமுடியாறு- 10, அம்பாச முத்திரம்- 3 , சேரன்மகாதேவி- 27, நாங்குநேரி- 18, களக்காடு- 52.2, மூலக்கரைப்பட்டி- 52, பாளையங்கோட்டை- 4, திருநெல்வேலி- 10.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,505 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,368 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. நீர்மட்டம் 136.30 அடியாக இருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 140.62 அடியை எட்டியிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநா டிக்கு 624 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 10 கனஅடிதண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. நீர்மட்டம் 84.20 அடியாக இருந்தது. 52.25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 100 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது.
அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்டுள்ள தண்ணீரும், தொடர் மழையால் பெருக்கெடுத்து வரும் காட்டாற்று நீரும் சேர்ந்ததால் தாமிரபரணியில் நேற்றும் வெள்ளம் கரைபுரண்டது. திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபம் உள் ளிட்ட கரையோர மண்டபங்களை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் கரைபுரண்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago