திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை, புரட்டாசி மாத சனிக்கிழமை, உள்ளூர் பண்டிகைகளை மட்டுமே வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். காலம், காலமாக தீபாவளி பண்டிகை அவர்கள் கொண்டாடுவதில்லை.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தாலும், ஏலகிரி மலை வாழ் மக்கள் தீபாவளியை கொண்டாடுவது இல்லை. இருப்பினும், மலை வாழ் மக்களின் பிள்ளைகளின் விருப்பத்திற்காக பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் துறை சார்பில் மலைவாழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி ஏலகிரி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு எஸ்.பி., டாக்டர். பாலகிருஷ்ணன் ஏலகிரி மலைக்கு சென்று அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு பட்டாசு பாக்ஸ், இனிப்பு, புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து கூறினார். அதன்பிறகு, அங்குள்ள மழை வாழ் சிறுவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடினார்.
திருப்பத்தூர் எஸ்.பி.,யின் இத்தகையை செயலுக்கு மலைவாழ் மக்கள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பிறகு, அவர்களுடன் ஆலோ சனை நடத்திய எஸ்.பி., டாக்டர். பாலகிருஷ்ணன் மலைவாழ் மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை செய்து வருவதாகவும், அவற்றை முறையாக பயன்படுத்தி, மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
பள்ளி கல்வியோடு மிட்டுமின்றி உயர்கல்வி பெற்று நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறாமல் செய்ய வேண்டும் எனக்கூறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago