தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரையின் பாரம்பரிய அடையாளமாக பாண்டிய நாட்டுச் சின்னத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, மூன்று மீன்கள் நீருற்றில் துள்ளி விளையாடுவது போன்ற பித்தளையால் அமையப் பெற்ற பிரமாண்டமான சிலையை மதுரை ரயில்வே நிலையத்தின் முன்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் 1999-ல் நிறுவியது. மதுரை மக்கள் இதை பாராட்டினர்.
இந்நிலையில், ரயில் நிலையத்தின் முன்பகுதியை அழகுப்படுத்தி, விரிவாக்கம் செய்யும்போது, நகர் பேருந்துகள் உள்ளே செல்ல வசதியாக அச்சிலையை அகற்றினர்.
அதற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் ரயில் நிலைய முன்பகுதியில் சிலையை மீண்டும் அமைக்க, அப்போதைய கோட்ட மேலாளர் உறுதி அளித்தார். அதன்பேரில், மீன் சிலை அகற்றப்பட்டு ரயில் நிலையத்திலுள்ள அறையில் வைக்கப்பட்டது.
தற்போதைய கோட்ட மேலாளர் அனந்த் பத்பநாபன் ரயில் நிலையத்தின் முன்புறம் தேசிய கொடிக் கம்பத்துக்கு அருகில் மீன் சிலையை அமைக்க இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளார்.
அவ்விடத்தில் மீன் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நவ.6 காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
இந்நிகழ்வில் மதுரை எம்பி சு. வெங்கடேசன், ரயில்வே கோட்ட மேலாளர், வர்த்தக மேலாளர், வர்த்தக சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago