மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி, 9 மாதம் கர்ப்பிணியான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் கருப்பாயி மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார்.
விசாரணையில், தாதன்குளத்தைச் சேர்ந்த பிரகாஷ்(21) என்பவர் கடந்த 3 ஆண்டாக சிறுமியிடம் பழகி அவரை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். இதில் அவர் 9 மாத கர்ப்பிணியான நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து கருப்பாயி டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பிரகாஷ், அவரது தந்தை ராமசாமி, தாய் குருதை, உறவினர் சுருளிவேல், அவரது மனைவி முத்து ஆகிய 5 பேர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago