மதுரை மாநகராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி நடைபெற இருப்பதால் ஒரு நாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மதுரை மாநகராட்சி வைகை குடிநீர் திட்ட குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நவ.6 (சனிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் வைகை வடகரை, வைகை தென்கரை பகுதியில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வடகரை பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வார்டு 6 முதல் 9, 27 மற்றும் 33 முதல் 47 வரையுள்ள அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூர், மீனாட்சிபுரம், குல மங்கலம் ரோடு, கோரிப்பாளை யம், ரேஸ்கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ.காலனி, பி அண்டு டி காலனி, பீ.பீ.குளம், நரிமேடு, புதூர், அண்ணாநகர், கே.கே.நகர், மதிச்சியம், கரும்பாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தென்கரை பகுதியில் வார்டு 19, 28, 63, 64, 77 மற்றும் 88 முதல் 93 வரையிலுள்ள ஹெச்.எம்.எஸ்.காலனி, விராட்டிபத்து, பொன்மேனி, சம்மட்டிபுரம், சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்துபுரம், டி.வி.எஸ்.நகர், முத்துப்பட்டி, அழகப்பன் நகர், கீரைத்துரை, வில்லாபுரம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்ப டுகிறது. அதனால், குடிநீரைச் சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்தவும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago