ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று(நவ.4) உற்சவர் நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளார்.
இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு சந்தனு மண்டபம் சேருவார். அங்கு 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்வார். பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை அலங்காரம், அமுது செய்யப்படும். பிற்பகல் 4.45 மணிக்கு ஜாலி (சாலி) அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு, ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதையாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இன்று காலை 6.30 முதல் 7.30 மணி வரை விஸ்வரூப தரிசனம் மற்றும் காலை 10.15 மணி முதல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரையிலும், மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சேவிக்க அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago