தொடர் மழையிலும் - களைகட்டிய தீபாவளி விற்பனை :

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக மழையால் தீபாவளி விற்பனை பாதிக்கப் பட்டிருந்த நிலையில், நேற்று கடைவீதிகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது. நேற்றும் அவ்வப்போது மழை பெய்தாலும் பொதுமக்கள் தீபாவளிக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க அதிகளவில் திரண்டனர். இதனால், சாலையோர கடைகள் முதல் பெரிய கடைகள் வரை வியாபாரம் சூடு பிடித்தது. இருந்தாலும், தொடர் மழை, கரோனா போன்ற காரணங்களால் வழக்கமான தீபாவளி விற்பனை இல்லை என வியா பாரிகள் கவலை தெரிவித்தனர். இதே போல, பல்வேறு கட்டுப்பாடுகள் காரண மாக பட்டாசு விற்பனையும் பாதிக்கப்பட்ட தாக பட்டாசு வியாபாரிகள் தெரிவித்தனர்.

மெயின்கார்டு கேட், காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, மேலரண் சாலை, என்எஸ்பி சாலை, சந்திரம் பேருந்து நிலையம், சூப்பர் பஜார், கோட்டை ரயில் நிலையச் சாலை, தில்லைநகர், பாலக்கரை என பல்வேறு கடை வீதிகளில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது.

தீபாவளி கடைசி நாள் விற்பனை காரணமாக கடை வீதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணி யிலும் மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியிலும் போலீஸார் ஈடுபட் டனர்.

இதேபோல, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்