நெல்லை மாவட்டத்தில் - 35 ஆயிரம் ஹெக்டேரில் பிசான நெல் சாகுபடி :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத் தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் பிசான நெல் சாகுபடி நடைபெற்று வருவதாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத் தில் தற்போது பிசான பருவ நெற்பயிர் சாகுபடி 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. நெற்பயிர் சாகுபடியில் நல்ல விளைச்சல் பெற விவசாயிகள் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும், உயர்விளைச்சல் பெற நுண்ணூட்ட சத்துக்கள் மிகவும் அவசியம்.

நெற்பயிர் சாகுபடியில், 1 ஹெக்டேருக்கு 25 கிலோ சிங்க்சல்பேட்டை, 50 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இடவெண்டும். அல்லது நெல் நுண்ணூட்ட கலவை 25 கிலோவை, 250 கிலோ தொழுஉரத்துடன் கலந்து, 30 நாட்கள் வைத்து ஊட்டமேற்றி நடவுக்குமுன் இட வேண்டும்.

வயலில் 1 ஹெக்டேரு க்கு 6.25 டன் தழை உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழுஉரம் இட்டிருப்பின், 1 ஹெக்டேருக்கு 12.5 கிலோ சிங்க்சல்பேட் போது மானதாகும். நெற்பயிரில் துத்தநாக சத்தின் திறனை அதிகரிக்க, கோ 51, கோ 47, ஏடிடி 47, ஏடிடி 37 ஆகியவற்றுக்கு 50 கிலோ துத்தநாக சல்பேட்டை கடைசி உழவின்போதும், இலைவழி தெளிப்பாக 0.50 சதவீதம் சிங்க்சல்பேட்டை 50 சதவீதம் பூக்கும் தருணம், கதிர் பால்பிடிக்கும் தருணம், தானிய முதிர்வு பருவம் ஆகிய 3 பருவங்களிலும் தெளிப்பதன் மூலம் தானிய த்தில் துத்தநாக சத்து முழுமையாக கிடைக்கும்.

நெல் நுண்ணூட்ட உரமானது அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நெல்லில் அதிக மகசூல் பெற்று பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்