சேதமடைந்த சாலைகளால் கடும் அவதி :

திருநெல்வேலியில் சேதமடைந்துள்ள சாலைகளால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:

திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோடு, குற்றாலம் ரோடு, அருணகிரி திரையரங்க சாலை, டவுண் மவுன்ட் ரோடு, காட்சி மண்டபம், பாலபாக்யா நகர், சிவசக்தி தியேட்டர் சாலை, திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூர் சாலைகள் பயணிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. இந்த சாலைகளில் வேதனையுடன் பயணிக்கும் பொதுமக்களின் நலன் காக்கும் பொருட்டு பழுதடைந்த அனைத்து சாலைகளையும் விரைந்து தரமாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது பெய்யும் மழையில் மாநகரப் பகுதியில் ஒரே நாளில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றும் திட்டப்பணிகள் ரூ. 295 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இம்மாநகராட்சிக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து கூடுதலாக 50 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறும் திட்டம் ரூ.230 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.இவ்விரு திட்டப்பணிகள் காரணமாக சாலைகள் சேதமடைந் துள்ளன. தெற்கு மவுண்ட் ரோடு, சிவசக்தி ரோடு, பாலபாக்யாநகர் மற்றும் அருணகிரி தியேட்டர் திட்டச் சாலை போன்ற இடங்களில் தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர்த் திட்டப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவு பெற்ற பின்னர் நிரந்தர மாக சாலைகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்