கடலூர் மாவட்டத்திலும் பலத்த மழை : நெற் பயிர்கள் நீரில் மூழ்கின

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில், சம்பா நடவு செய்யப்பட்ட வயல்கள் மழை நீரில் மூழ்கியது.

தமிழகத்தில் கடந்த 26-ம் தேதிமுதல் வடகிழக்கு பருவமழை மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர்மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம்,குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, முஷ்ணம், புவனகிரி, நெய்வேலி, வடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

சேத்தியாத்தோப்பு பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் சம்பா நடவு செய்து, 15 நாட்களே ஆன நடவுப்பயிர் தண்ணீரீல் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் நாணமேடு பகுதியிலும் விளைநிலங்களில் மழை நீர் புகுந்துள்ளது. புவனகிரி அருகே சாத்தப்பாடியில் கிராம வடிகால் வாய்க்காலில் புதிய பாலம் கட்டப்படுவதால் தற்காலிக மாற்று வழி சாலை அமைக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக இந்த தற்காலிக சாலையின் மீது 2 அடி தண்ணீர் சென்றதால் புவனகிரி - குறிஞ்சிப்பாடி இடையேயான சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய மழையளவு விவரம் வருமாறு:

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: 125.2 மி.மீ, கடலூர்: 116 மி.மீ, குறிஞ்சிப்பாடி: 95 மி.மீ, வானமாதேவி: 74.8 மிமீ, பண்ருட்டி: 66மிமீ, பரங்கிப்பேட்டை : 50.6 மிமீ, வேப்பூர்: 40 மிமீ, புவனகிரி: 39 மி.மீ, காட்டுமன்னார்கோவில் : 33 மிமீ, முஷ்ணம் : 28.3 மி.மீ, சிதம்பரம்: 24.3 மி.மீ, சேத்தியாத்தோப்பு: 24 மி.மீ, விருத்தாசலம் : 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்