பாசனத்திற்காக கோமுகி அணை திறப்பு : 10,860 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமகி அணை பாசனத்திற்காக நேற்று திறக்கப்பட்டது. பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இந்நிகழ்வில் பங்கேற்று, பாசன நீரை திறந்து விட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தில் உள்ள 46 அடி நீர் மட்டம் கொண்ட கோமுகி அணையின் மொத்தக் கொள்ளளவு 560.96 மி.க. அடியாகும். கல்வராயன்மலையின் அடிவாரத்தில் கோமுகி நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையில் 11 அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணைக்கட்டுகளிலிருந்து 40 ஏரிகள் நீர் ஆதாரம் பெறுகிறது. பழைய பாசன பரப்பு 5,860 ஏக்கர் நிலமும், புதிய பாசன பரப்பு 500 ஏக்கர் நிலமும் என மொத்தம் 10,860 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று பயனடைகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், “இவ்வணையிலிருந்து பழைய பாசன ஆற்றில் விநாடிக்கு 60 கன அடி நீரும், புதிய பாசன ஆற்றில் விநாடிக்கு 50 கன அடி நீரும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் திறப்பதன் மூலம் பழைய பாசன பரப்பில் 7 கிராமங்களும், புதிய பாசன பரப்பில் 11 அணைக்கட்டுகள் மூலம் 33 கிராமங்களும் என சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான ஏரிகள் உட்பட அனைத்தும் தூர்வாரப் பட்டுள்ளதால், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை விவசாயிகள் உரிய முறையில் பாதுகாத்து விவசாய பாசனத்திற்கு பயன்படுத்திட தேவையான அனைத்து முன் னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் இவ்வணை யிலிருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்படும் தண்ணீரை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த அணை திறப்பு நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர், எம்எல்ஏக்கள் உதயசூரியன் (சங்கராபுரம்) க.கார்த்திக்கேயன் (ரிஷிவந்தியம்) ஏ.ஜெ.மணிக்கண்ணன் (உளுந்தூர் பேட்டை), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பெ.புவனேஸ்வரி, நீர் வளத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி செயற்பொறியா ளர்கள் சுதர்சன், கோவிந்தராசு, சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்