வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை குறைக்கக் கோரி காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தை நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம் என்று மதுரை மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கரோனாவை கட்டுப்படுத்த ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக உணவக உரிமையாளர்கள் நஷ்ட மடைந்தனர். தற்போது ஓரளவு வியாபாரம் நடந்து வரு கிறது.
இந்நிலையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 278 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நியாயமான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
விலையை குறைக்கக் கோரி காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தை நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago