மதுரை அருகே போலி ஆவணம் மூலம் 49 சென்ட் இடம் அபகரிக்கப்பட்ட சம்பவத்தில் சார்பதிவாளர் உட்பட 10 பேர் மீது நில அபகரிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (63). இவரது தந்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதி யில் 49 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கினார்.
இந்நிலையில், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த செழியன் மற்றும் செக்கானூரணியில் பணிபுரிந்த சார்பதிவாளர் செங்குட்டுவன் ஆகியோர் மேற்கண்ட நிலத்துக்கு போலியாக ஆவ ணங்களை தயாரித்தனர்.
மேலும் மதுரை பைக்காரா முத்து ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பாப்பு என்பவர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து, மேற்படி நிலத்தில் 25 சென்ட் இடத்தை செழியனுக்கு உறுதிமொழி பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், பூவரசன்பட்டி கருப்பையா, பாக்கியம் ஆகியோர் உதவியுடன் தேனம்மாள் கையெழுத்தை பயன்படுத்தி செழியனுக்கு மேலும் 24 சென்ட் நிலத்தை உறுதிமொழி பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 2008-ல் 49 சென்ட் இடத்தை செழியன், மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்த சித்ராவுக்கு மொத்தமாக பதிவு செய்து கொடுத்தது சமீபத்தில்தான் மாரியப்பனுக்கு தெரி யவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் செய்தார்.
அதன்பேரில் செழியன், பாப்பு, அவரது கணவர் சின்னப்பா, தேனம்மாள், கருப்பையா, அவரது மகன்கள் முருகன், கணேசன், பாக்கியம், சார்பதிவாளர் செங்குட்டுவன் மற்றும் சித்ரா ஆகியோர் மீது போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago