மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் இடைநிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம் மற்றும் காண்கலை எனும் 4 பிரிவுகளில் கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதனையொட்டி நடப்பு கல்வியாண்டுக்கான மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நேற்று யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கென தனித்தனியாக நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் பாராட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கினார்.
இதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.திருஞானம், அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.சுசித்ரா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அ.மகாலிங்கம், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐடா ஜெயக்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago