திருச்சி மாவட்ட காவல் துறையில் 'தலை தீபாவளி' கொண்டாடும் 99 போலீஸாருக்கு தீபாவளியன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி பா.மூர்த்தி தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
திருச்சி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தீபாவளி பண்டி கையை மகிழ்ச்சியாகவும், பாது காப்பாகவும் கொண்டாடு வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல் துறை மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
ரவுடிகளைப் பிடிக்க 6 சிறப்பு தனிப்படைகளும், சட்ட விரோத மது விற்பனை மற்றும் பட்டாசு விற்பனையைத் தடுக்க 5 சிறப்பு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என 50 காவல் அதிகாரிகள் தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸாரின் பணிச்சுமை, மன அழுத்தத்தை குறைப்பதற்காக யோகா உள்பட பல்வேறு புத்துணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகி ன்றன. மேலும் டிஜிபி உத்தரவின் படி வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுதவிர, திருமணமாகிய பிறகு முதல் தீபாவளியான 'தலை தீபாவளி' கொண்டாடும் திருச்சி மாவட்ட போலீஸார் 99 பேருக்கு தீபாவளி அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago