அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட அளவிலான பயிற்சி பணிமனை நேற்று நடைபெற்றது.
கரோனா தொற்று பரவல் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாண வர் களுக்கு நேரிட்டுள்ள கற்றல் இடைவெளி, இழப்பு ஆகியவற்றை ஈடுசெய்யும் வகையில், தினமும் பள்ளி முடிந்த பிறகு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தமிழக அரசு ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் அந்தந்த குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவர். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்று விக்கும் தன்னார்வலர்கள் பிளஸ் 2 தேர்ச்சியும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பயிற்றுவிக்கும் தன்னார் வலர்கள் ஏதாவது ஒரு பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தன்னார்வலர்கள் தங்களது குடியிருப்புப் பகுதிகளி லேயே இந்தச் சமூகப் பணியை மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், மதுரை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவது தொடர்பாக மாநில அளவிலான பயிற்சி ஏற்கெனவே அக்.29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், திருச்சி மாவட்ட அளவிலான பயிற்சி தெப்பக் குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இந்த பயிற்சி பணிமனையை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தொடங் கிவைத்து திட்டச் செயல் பாடுகள் குறித்து விளக்கினார். பயிற்சி பணிமனையில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உமா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வின்சென்ட் டி பவுல், மாநகராட்சி உதவி ஆணையர் அக்பர் அலி, பேராசிரியர் ஆர்.காளீஸ்வரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சமூக அமைப்பு உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago