தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரு கிறது. இந்தநிலையில், நேற்று கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நாளை தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதனால், திருச்சியில் உள்ள மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை மிக அதிகமாக உயர்ந்திருந்தது.
இதுதொடர்பாக காந்தி மார்க் கெட் பூ வியாபாரி ஆர்.பார்த்தி பன் கூறியது: தொடர் மழை யாலும், கல்லறை திருநாள் மற்றும் தீபாவளி பண்டிகை யாலும் பூக்கள் விலை உயர்ந் துள்ளது. இதனால், கடந்த 4 நாட் களுக்கு முன் ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப் பூ இன்று(நேற்று) ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகிறது.
இதேபோல, ரூ.200-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ.800-க்கும், சம்மங்கிப் பூ ரூ.10-லிருந்து ரூ.50-க்கும், ரூ.10, ரூ.20-க்கு விற்கப்பட்ட செவ்வந்தி ரூ.80, ரூ.100, ரூ.120-க்கும், ஜாதிப் பூ ரூ.200-லிருந்து ரூ.600-க் கும், பிச்சிப் பூ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago