பெரம்பலூரில் தமிழ் வழி கல்வி இயக்கத்தின் சார்பில் மொழிவழித் தாயகம் தமிழ்நாடு அமைந்த நாள் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவ்வியக்கத்தின் செயலாளர் தேனரசன் தலைமை வகித்தார். இயக்க நிர்வாகிகள் தங்கராசு, அக்ரி ஆறுமுகம், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் சின்னப்ப தமிழர் சிறப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கில், 1956-ம் ஆண்டு நவ. 1-ம் தேதி மொழிவழித் தாயகம் தமிழ்நாடு அமைந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பயன்படுத்தும் பதிவேடுகள் அனைத்தும் தமிழ் மொழியில் பதிவு செய்ய வேண்டும். பெரம்பலூரில் சித்த மருத்துவ ஆய்வு கல்லூரி அமைக்க வேண்டும், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் சேர்க்கை மற்றும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago