சரவெடிகள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க தென்காசி ஆட்சியர் வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் கூறியிருப்ப தாவது:

தீபாவளித் திருநாளில் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும். அதிகப்படியான பட்டாசு ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழ ந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பொதுமக்கள் திறந்தவெளியில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்