தனித்தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு : சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஆர். மருதகுட்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை க்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலை க்கழக துறை மாணவர்களின் 2021-ம் ஆண்டுக்கான நவம்பர் தேர்வுகள் டிசம்பர் 2 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்த அபராத கட்டணமின்றி வரும் 10-ம் தேதி வரையும், அபராத கட்டணத்துடன் வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையும் செலுத்தி பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுகள் அனைத்தும் அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அந்தந்த கல்லூரிகளில் வழக்கமான முறையில் நடைபெறும்.

மேலும் 2016-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகளில் இளநிலை 2016-ம் ஆண்டு, முதுநிலை 2017-ம் ஆண்டு, முதுநிலை கணினி பயன்பாடுகள் 2016-ம் ஆண்டு மற்றும் ஆய்வு நிறைஞர் 2018-ம் ஆண்டு பட்ட மற்றும் பட்டமேற்படிப்புகளில் சேர்ந்து நிறைவு செய்ய முடியாத தனி தேர்வர்களுக்கு கரோனா நோய் தொற்றின் காரணமாக கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட தனித் தேர்வர்கள் வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் இணையவழியில் தேர்வு கட்டணத்தை செலுத்தி நவம்பர் 2021 தேர்வுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களை msuniv.ac.in என்ற இணையதளம் வழியாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்