மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
வேலூர் அடுத்த மேல்மொண வூரில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான புதிய திட் டங்கள் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங் கினார். தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள 3,510 குடியிருப்புகளில் மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மட்டும் சுமார் ரூ.9 கோடி மதிப்பில் 220 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியின் முடிவில், மேல்மொணவூர் இலங்கை தமிழர் முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று ஆய்வு மேற் கொண்டார். அப்போது, முகாம் வாழ் மக்கள் முதல்வரை உற்சாக மாக வரவேற்றனர். முகாம் பகுதியில் 30 குழந்தைகளுடன் செயல்படும் அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங் கினார். பின்னர், முகாமில் உள்ள பகீரதன் என்பவர் வீட்டுக்குச் சென்ற முதல்வர் அவர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்ததுடன் அவர்களின் கைக்குழந்தையை தூக்கி கொஞ்சினார்.
பின்னர், முகாம் வளாகத்தில் திரண்டிருந்த மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டார். அப்போது, ‘எங்கள் முகாமுக்கு முதல்வராக வந்திருப்பது நீங்கள் மட்டும்தான். வேறு யாரும் எங்களை பார்த்தது கூட இல்லை. நீங்கள் செய்துள்ள இந்த உதவியை நாங்கள் எப் போதும் மறக்க மாட்டோம்’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago