நாராயணி மருத்துவ மனை பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் அதிநவீன மருத்துவ கருவிகள் அறிமுகம் செய்து வைக்கப் பட்டது.
வேலூர் நாராயணிமருத்துவ மனையில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கருவியை லண்டன் மருத்துவர்கள் சஞ்சய் பிரசாத், நிவேதிதாசிங் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குநர் பாலாஜி பேசும்போது, ‘‘இந்த அதிநவீன கருவி யின் மூலம் தோல் சிகிச்சை, தேவையற்ற ரோமங்களை நிரந்தரமாக நீக்க, அடர் மற்றும் சிவப்பு நிற புள்ளிகளை நீக்க, மெலானின் நிறமியை கட்டுப்படுத்த, தழும்புகளை நீக்க, தோல் முடிச்சுகள், மச்சம், மருக்களை நீக்க, அறுவை சிகிச்சைக்குப் பிறகு தோலில் ஏற்படும் தழும்புகளை சரி செய்யவும், டாட்டூவை அழிக்க வும் உதவும்’’ என தெரிவித்தார்.
அப்போது, பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் நிவாசன், மருத்துவமனை கண் காணிப்பாளர் டாக்டர் தமிழரசி, துணை கண் காணிப்பாளர் டாக்டர் கீதா இனியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago