செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 53.40 அடியை எட்டியுள்ளது :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 53.40 அடியை எட்டியுள்ளது.

119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணையில் 3,392 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் 820 கனஅடி தண்ணீரும், முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 14.6 மி.மீ., மழை பெய்துள்து.

59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணையில் 647 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் விநாடிக்கு 80 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 7.4 மி.மீ., மழை பெய்துள்ளது.

62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. அணையில் 200 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 32 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 20.34 அடியாக உள்ளது. அணையில் 72 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 21 கனஅடி தண்ணீர் வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 20 மி.மீ., மழை பெய்துள்ளது. இதில், அதிகபட்சமாக வந்தவாசி பகுதியில் 47 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஆரணி, செய்யாறு மற்றும் கீழ்பென் னாத்தூரில் தலா 23 மி.மீ., செங்கத்தில் 7.2 மி.மீ., ஜமுனா மரத்தூரில் 16 மி.மீ., போளூரில் 15.2 மி.மீ., திருவண்ணாமலையில் 18 மி.மீ., தண் டராம்பட்டில் 15.6 மி.மீ., கலசப்பாக்கத்தில் 20 மி.மீ., சேத்துப்பட்டில் 19 மி.மீ., வெம்பாக்கத்தில் 12 மி.மீ., மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்