நொய்யல் ஆற்றில் மலர்தூவி : நன்றி தெரிவித்த தன்னார்வலர்கள் :

கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அனிச்சம், ஆம்பல், வெட்சி, கரந்தை, வாகை, தும்பை, துளசி, தென்னம்பூ, வாழைப்பூ, கோரை, தேமாம்பூ, செம்மணி, ஊமத்தை, பூவரசு உள்ளிட்ட 218 வகையான மலர்களை கொண்டு செந்தமிழில் வாழ்த்துப்பாடி, மங்கல வாத்தியங்கள் இசைக்க, குளங்களை நிரப்பி பயணித்துக் கொண்டிருக்கும் நொய்யலுக்கு நன்றிகூறும் நிகழ்வு பேரூர் படித்துறையில் நேற்று நடைபெற்றது. இதில், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு நொய்யலில் மலர்தூவி வணங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்