பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவில் - ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம் :

பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி விறுவிறுப்படைந்துள்ளது.

பொள்ளாச்சி – பாலக்காடு நெடுஞ்சாலையின் குறுக்கே பொள்ளாச்சி-போத்தனூர் அகல ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் போது கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.45 கோடியும், ரயில்வே சார்பில் ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.

80 சதவீதத்துக்கு மேற்பட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில்வே மூலம் தண்டவாளத்தின் மேற்பகுதியில் அமைக்கும் பாலம் பணி தாமதமாகி வந்தது. இந்நிலையில், தெற்கு ரயில்வே வடிவமைப்புக்கு அனுமதி கொடுத்த நிலையில், நேற்று முன்தினம் பாலத்தின் இருபுறத்தையும் இணைக்கும் வகையில் ராட்சத கிரேன் மூலம் இரும்பு தூண்கள் பாலத்தில் வைக்கப்பட்டன. இந்த பணிகளை ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொள்ளாச்சி-வடுகபாளையம் பிரிவில் அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலம் பணியில் 18 தூண்கள் அமைக்கப்பட்டுவிட்டன. 850 மீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையுடன் மேம்பாலம் கட்டப்படுகிறது. தற்போது பாலம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பாலத்தின் இருபுறமும் இணைக்கும் வகையில் பணி நடைபெற்றது. 25 டன் எடை கொண்ட 8 இரும்பு தூண்கள், 110 அடி உயரம் கொண்ட ராட்சத கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்டு வருகிறது. பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்