இல்லம் தேடி கல்வி திட்டத்தை : தமிழக அரசு கைவிட வேண்டும் : புதிய தமிழகம் கட்சி தலைவர் வலியுறுத்தல்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பெண் தலைவர், ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் நெருக்கடி காரணமாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இதை மாநில தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது. இதை வலியுறுத்தி கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வரும் 3-ம் தேதி புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ குறிப்பிட்ட அமைப்பினரின் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் தரும் வகையில் இருக்கும். எனவே, இத்திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் விரைவில் இந்து அமைப்புகளை ஒன்று சேர்த்து சென்னை அல்லது கோவையில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும்.

தமிழக கோயில்களில் உள்ள நகைகள் அனைத்தும் பக்தர்கள் வழங்கியது. அவற்றில் 5 லட்சம் கிலோ தங்கம் கட்டிகளாக உருக்கப்படும் என தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்